மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 65 நாட்கள் மொத்தம் 74 போட்டிகள் என ஐபிஎல் தொடர் இம்முறை ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக ஆட்டத்தை மார்ச் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிற
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி இடத்தையே பிடித்தது. இதனால் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். எனினும் ஹர்திக் பாண்டியா அதன் பிறகு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதனை அடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் எந்த ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்களோ அதே ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை வரவேற்று பாராட்டினர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு புது சீசன் புதிய உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பமே அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தந்திருக்கிகிறது. ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஹர்திக் பாண்டியா ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரே சீசனில் மூன்று முறை இந்த தவறை அவர் செய்ததால் ஹர்திக் பாண்டியாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் தான் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தத் தடை தற்போதைய சீசனில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த தடையை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பிசிசிஐ இடம் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒரே சீசனில் மூன்று முறை தவறு செய்த நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் இந்த தடையை அடுத்த சீசனுக்கு கொண்டு வரக்கூடாது என்று மும்பை அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஹர்திக், சிஎஸ்கே எதிரான போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.