ஒரு கபடி விளையாட்டு, தலா ஏழு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படுகிறது. இரு அணி வீரர்களும் தனித்தனியாக, எதிரணியின் எல்லைக்குள் பாடிச் செல்லும் போது (ride), எதிராளியை தொட்டுவிட்டு, தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும்.

ஆட்டம், 14 வயது மீனாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த விளையாட்டு கட்டுப்படுத்தப்பட்ட, கிராமப்புறச் சூழலில் இருந்து விடுபட அவருக்கு உதவுகிறது, வாய்ப்புகள் நிறைந்த உலகத்திற்கான கதவைத் திறக்கிறது.

“நான் விளையாடும் போது வித்தியாசமாக உணர்கிறேன்” என்று கூறும் மீனா தனது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கப் போராடுகிறார்.

“அந்த நேரத்தில், நான் வீட்டு வேலைகளுக்குக் கட்டுப்பட்ட மீனா இல்லை. அழுத்தங்களைச் சுமந்திருக்கும், எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும் மீனா. கபடி விளையாடும் போது, விளையாடாத மற்ற பெண்களை விடவும் நான் மிகவும் சக்தி வாய்ந்தவளாக உணர்கிறேன்.”
மும்பையிலிருந்து சுமார் 230 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஷோடி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கிறார் மீனா. அங்குள்ள பெண்களின் வாழ்க்கை காலங்காலமாக வீட்டு வேலைகள், திருமணம் மற்றும் குழந்தைகளைச் சுற்றியே உள்ளது.

ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் குழு ஒன்று மாணவிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிவெடுத்தது.

ஆரம்பத்தில், இரண்டு மாணவிகள் மட்டுமே அவர்களின் கிளப்பில் இணைந்தனர்.

“பெற்றோர்கள் தங்கள் மகள்களை கபடி விளையாட அனுமதிக்கத் தயாராக இல்லை. ஏனெனில், அது வீட்டைவிட்டு வெளியே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். தங்கள் மகளின் திருமண வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் கவலைப்பட்டனர். ஏனெனில், பாரம்பரிய குடும்பங்கள் பெண்கள் வெளியே சென்று தாமதமாக வீட்டிற்கு வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
தாஜியும் அவரது சகாக்களும் வீடுவீடாகச் சென்று, பள்ளி நேரத்திற்கு முன்னும் பின்னும் பயிற்சி நேரங்களில் அவர்களின் மகள்கள் கபடி விளையாடும் போது பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பெற்றோருக்கு உறுதியளித்தார்கள். சிறுமிகளை முறையாகக் கண்காணிப்பதாகவும், அவர்கள் திசை மாறிவிட மாட்டார்கள் என்றும் ஆசிரியர்கள் குழு உறுதியளித்தது.

இந்த கிளப் தொடங்கப்பட்ட காலத்தில், ஆசிரியர்களே மாணவிகளை அவர்களின் வீடுகளில் இருந்து அழைத்து வந்து விடுவார்கள். ஆனால், எண்ணிக்கை அதிகரிக்கவே, அது சாத்தியப்படவில்லை. இப்போது கிளப்பில் சுமார் 30 மாணவிகள் உள்ளனர். அவர்கள் பயிற்சியளிக்கத் தொடங்கியதில் இருந்து தாஜியின் மகள் உள்பட 300 பேர் அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சில மாணவிகள் 7 வயதிலேயே கபடி விளையாடத் தொடங்குகிறார்கள்.

Leave a comment

error: Content is protected !!