ஐஎஸ் எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பெங்களூரு எப் சி சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப் சி, ஒடிசா எப் சி, கேரளா பிளாஸ்டர் எஃப் சி என 13 அணிகள் பங்கு பெற்று இருக்கிறது.

இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி நேரடியாக அரை இறுதிச் சுற்றுக்கு செல்லும். மூன்றாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்தில் உள்ள அணிகள் தங்களுக்குள் மோதி அரை இறுதி சுற்றுக்கு செல்லும். இந்த நிலையில் ஐ எஸ் எல் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் மோகன் பஹான் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இருக்கிறது.

இந்த அணி 9 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, ஒரு தோல்வி இரண்டு ட்ரா என 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூர் எப் சி அணி இருக்கிறது. இந்த அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, இரண்டு தோல்வி என 20 புள்ளிகளுடன் உள்ளது.

ஒடிசா எஃப் சி 10 போட்டிகளில் நான்கு வெற்றி மூன்று தோல்வி என 15 புள்ளிகள் மூன்றாம் இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணி 10 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் நான்காம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் எப் சி அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மூன்று தோல்வி என 15 புள்ளிகளுடன் உள்ளது.ஆறாவது இடத்தில் எப்சி கோவா அணி இருக்கிறது. ஏழாவது இடத்தில் மும்பை சிட்டி அணி இருக்கிறது.

மும்பை அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, நான்கு சமன் இரண்டு தோல்வி என 13 புள்ளிகளுடன் உள்ளது. எட்டாவது இடத்தில் சென்னையின் எப் சி இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, மூன்று சமன் நான்கு தோல்வி என 12 புள்ளிகளுடன் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் ஜம்சத்பூர் அணியும், பத்தாவது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், 11-வது இடத்தில் ஹைதராபாத் fc அணியும் 12-வது இடத்தில் முஹம்மதின் எஸ் சி அணியும்,13-வது இடத்தில் ஈஸ்ட் பெங்கால் எப் சி அணியும் உள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை இந்த தொடர் ஏற்றம் இறக்கம் என கலவையாக அமைந்திருக்கிறது. சென்னை அணி அடுத்ததாக வரும் ஏழாம் தேதி தங்களது சொந்த மண்ணில் ஈஸ்ட் பெங்கால் எப்சி அணியை எதிர்கொள்கிறது. அதன்பிறகு 11ஆம் தேதி ஹைதராபாத் எப் சி அணியை சென்னையில் பல பரிட்சை நடத்துகிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Leave a comment

error: Content is protected !!